தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/தேஜோமயானந்தர்/மனதைக் கட்டுப்படுத்தும் வழி

மனதைக் கட்டுப்படுத்தும் வழி

மனதைக் கட்டுப்படுத்தும் வழி


ADDED : அக் 29, 2008 08:58 AM

Google News

ADDED : அக் 29, 2008 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>தியானத்தில் ஈடுபடுவோரின் மனநிலையைப் பொறுத்தே நம் மனம் ஒருநிலைப்படும். கூடிய வரை நன்கு ஓய்வு எடுத்த நிலையில் மனம் தெளிவாக இருக்கும். அந்நிலையில் தியானத்தில் அமர்வது நல்லது. அதனாலேயே தியானம் செய்ய அதிகாலைப் பொழுதே நல்லது என்று கருதுகிறார்கள். யோகப்பயிற்சியில் நல்ல அனுபவம் வாய்ந்த நிபுணரிடம் கற்றுக் கொண்டு, மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைப் பழகியவர்கள் தியானம் செய்யத் தொடங்கும் போது மிக விரைவில் மனதைக் கட்டுப்படுத்தலாம். ஒருமுகப்பட்ட மனம் தியானத்தில் லயிக்க ஆரம்பிக்கும். நம்முடைய சிந்தனையில் இருக்கும் அனுபவங்கள் யாவும் தியானத்தின் போது உருவெடுத்து எண்ணத்தில் தோன்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து தியானத்தை விடாது பழகும் போது தான் இந்த எண்ணங்கள் மறையத் தொடங்கும். பின்னர் தியானம் செய்ய அமர்ந்த சிறிது நேரத்திலே நம் மனம் ஒருமுகப்படுவதை உணரலாம்.தியானத்தில் நாம் சாட்சியாக மட்டுமே இருந்து நம் எண்ணங்களை கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கப் பழகும் போது நாம் அந்த எண்ணங்களில் ஆழ்ந்து விடாமல் படிப்படியாக விலகி நிற்க முடியும். நாளும் கடமையாக தியானம் பயில்பவனால் எண்ணங்களைக் கடந்து மனதைக் கட்டுப்படுத்த முடியும். </P>



Trending





      Dinamalar
      Follow us